உடன்பிறந்த 12 வயதுச் சகோதரியை வல்லுறவிற்கு உட்படுத்திய 16 வயது சகோதரனுக்கு 5 வருட கடூழிய சிறை!!

539

jail

சொந்த சகோ­த­ரி­யா­கிய 12 வய­து­டைய சிறு­மியை 16 வய­து­டைய அவ­ரது கூடப்­பி­றந்த சகோ­தரன் 8 வரு­டங்­க­ளுக்கு முன்னர் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய வழக்­கில், சகோ­த­ர­னுக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன், 5 வருட கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்ளார்.

இந்த வழக்கு நேற்று திங்­கட்­கி­ழமை விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போதே, இந்தத் தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பாணம் கொழும்­புத்­து­றையில் 2007 ஆம் ஆண்டு இந்தச் சம்­பவம் நடைபெற்­றுள்­ளது.

இத­னை­ய­டுத்து, 12 வயது நிரம்­பிய கூடப்­பி­றந்த சகோ­த­ரியை பாலியல் வன்­பு­ணர்வு புரிந்­த­தாக அவ­ரு­டைய சொந்த சகோ­த­ர­னா­கிய 16 வய­து­டைய சிறு­வ­னு­க்கு எதி­ராக சட்­டமா அதி­ப­ரினால் குற்றம் சுமத்­தப்­பட்டு, யாழ். மேல் நீதி­மன்­றத்தில் இந்த வழக்கு விசா­ரணை நடை­பெற்­றது. பாதிக்கப்­பட்ட பெண் (இப்­போது அவ­ருக்கு 20 வயது. சகோ­த­ர­னுக்கு வயது 24) நேற்று திங்கட்கிழமை நீதி­மன்­றத்தில் சாட்­சி­ய­ம­ளித்தார்.

அப்­போது, எதிரிக் கூண்டில் நின்­ற­வரைக் காட்டி, அவர் தனது மூத்த சகோ­தரன் என்றும், அவர் தன்னை பாலியல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தா­கவும், அதனைக் கண்ட தனது தந்­தையார், தன்னை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தற்­காக, தனது சகோ­த­ரனை அடித்­த­தா­கவும் தனது சாட்சியத்தில் அந்தப் பெண் தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து எதிரி, தான் பாலியல் வன்­பு­ணர்வு குற்றம் செய்­ததை நீதி­மன்­றத்தில் ஒப்புக்கொண்டார். அப்­போது எதிரி தரப்பில் நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சட்­டத்­த­ரணி, குற்றச் செயல் இடம்­பெற்­ற­போது, எதி­ரிக்கு 16 வயது. இந்த வழக்கின் விசா­ரணை காலத்தில் அவர் 3 வருடங்கள் விளக்­க­ம­றி­யலில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்தார். அத்­துடன், பதி­னாறு வய­துக்கும் 18 வய­துக்கும் இடைப்­பட்ட பதின்­ப­ரா­ய­மு­டைய ஆண் மகன் ஒருவர் பாலியல் வன்­பு­ணர்வில் ஈடுபட்டால், அவ­ருக்கு தண்­டனை குறைப்பு உள்­ளது என்று சுட்­டிக்­காட்டி, எதி­ரிக்கு குறைந்த பட்ச தண்­டனை வழங்க வேண்டும் என விண்­ணப்பம் செய்தார்.

ஆனால் அரச சட்­டத்­த­ரணி, திரு­மதி நளினி சுபா­கரன் சொந்த சகோ­தரி மீது பாலியல் குற்றம் புரிந்த எதி­ரிக்கு அதி­க­பட்ச தண்­டனை வழங்க வேண்டும் என நீதி­ப­தி­யிடம் கோரினார். அத்­துடன். பாதிக்கப்­பட்ட பெண் சத்­தியப்பி­ர­மா­ணத்தின் அடிப்­ப­டை­யி­லேயே, தனக்கு நேர்ந்த குற்றச் செயல் குறித்து, சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார். கூடப்­பி­றந்த சகோ­தரன் தன்னை வன்­பு­ணர்­வுக்கு உட்படுத்திதாகவும் அவர் தெளி­வாக சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்தே, எதிரி குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டுள்ளார். இந்த குற்­றத்­திற்கு பத்து ஆண்­டுகள் சிறைத் தண்­டனை விதிக்க வேண்டும் என்று சட்டம் பரிந்­து­ரைக்­கின்­றது. குறைந்­த­பட்ச தண்­டனை பரிந்­து­ரைக்­கப்­ப­ட­வில்லை. எனவே, எதி­ரிக்கு அதி­க­பட்ச தண்­டனை வழங்க வேண்­டும் என்று நீதிமன்­றத்தில் சமர்ப்­பணம் செய்தார். இத­னை­ய­டுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்­கிய நீதி­பதி இளஞ்­செ­ழியன் தனது தீர்ப்பில் தெரி­வித்­த­தா­வது,

இந்த வழக்கில் பாதிக்­கப்­பட்­ட­வரும், குற்றம் சுமத்­தப்­பட்­ட­வரும் கூடப் பிறந்த சகோ­த­ரர்கள். எதிரி குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டுள்ளார். பாதிக்­கப்­பட்ட பெண்ணும் தனது சகோ­தரன் தன்னை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தினார் என்று நீதி­மன்­றத்தில் அளித்த சாட்­சி­யத்தில் தெரி­வித்­துள்ளார்.

விசா­ரணை நடை­பெற்ற போது, எதிரி தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 3 ஆண்­டுகள் விளக்­க­ம­றியல் காலமும் கவ­னத்தில் கொள்­ளப்­ப­டு­கின்­றது. எதிரி 16 வய­தி­லேயே குற்றம் புரிந்தார் என்­பதும் கவனத்தில் எடுக்­கப்­ப­டு­கின்­றது. இருப்பினும் கூடப் பிறந்த சகோ­த­ரியை காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மாக வன்­பு­ணர்வு செய்­ததைக் குற்றச் செயலாகவே மன்று கருதுகின்றது.
அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, எதிரி 25 ஆயிரம் ரூபா நட்டயீடு செலுத்த வேண்டும் என்றும், தண்டப்பணமாக, அவர் ஐயாயிரம் ரூபா செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.