தமிழக அரசை தலைகுனிய வைத்துள்ள இலங்கை தம்பதிகளின் தற்கொலை செய்ய முன்னர் எழுதிய கடிதம்!!

920

1

தமிழ்நாடு திருச்சி முகாமில் தற்கொலைக்கு முயற்சித்துள்ள இலங்கை தம்பதிகள் எழுதி வைத்த கடிதம் ஒன்று அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருமணம் முடிந்த தம்பதிகள் ஒன்று சேர்வதற்கு தமிழக அரசு தடையாக இருந்துள்ளமை பெரும் வருத்தத்தை ஏற்படுத்திய சம்பவமாக மாறியுள்ளது.

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கையைச் சேர்ந்த தம்பதியர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த மகேஸ்வரன் (35) போலி கடவுச்சீட்டு வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னையில் வசித்து வந்த அவரது மனைவி பிரசாந்தி (30) அவரைக் காண திருச்சி வந்து முகாமில் அவரை சந்தித்தார்.

சில நிமிடங்களில் இருவரும் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையின் போது தான் அவர்கள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது.

தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்கள் தூக்க மாத்திரை சாப்பிட்டமைக்கான காரணம் அவர்கள் எழுதிவைத்த கடிதத்தின் மூலம் வெளியாகியுள்ளது.

2 3 4 5 6