திருமணமானதை மறந்த பெண் இரண்டாவது தடவையாக கணவரை திருமணம் செய்தார்!!

373

bride

கார் விபத்­தொன்றில் நினை­வாற்றல் பாதிக்­கப்பட்டு தனக்குத் திரு­ம­ண­மா­கி­யுள்­ளதை மறந்த பெண்­ணொ­ருவர், தனது கண­வரை மீண்டும் திரு­மணம் செய்த விசித்­திர சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த திரு­மண வைபவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் திங்கட்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.வேர்­ஜி­னியா மாநி­லத்தைச் சேர்ந்த ஜஸ்டிஸ் ஸடம்பர் (20 வயது) என்ற மேற்­படி பெண் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தென்­னஸி மாநிலத்திலுள்ள பிரிஸ்டல் நகரில் இடம்­பெற்ற கார் விபத்தில் படு­கா­ய­ம­டைந்தார்.

அவ­ருக்கும் அவ­ரது காதலர் ஜெர­மிக்கும் (21 வயது) திரு­ம­ண­மாகி 19 நாட்­களில் இந்த விபத்து இடம்­பெற்­றி­ருந்­தது. அந்த விபத்தால் நினை­வாற்றல் பாதிக்­கப்­பட்ட ஜஸ்டிஸ் தனக்குத் திரு­மணம் நடந்­த­தையே மறந்­துள்ளார்.

இந்­நி­லையில் அவர் தனது திரு­மணம் இடம்­பெற்ற முத­லா­வது ஆண்டு தினத்தில் தனது கண­வரை மீண்டும் திரு­மணம் செய்­துள்ளார்.அவர்­க­ளது திரு­மணம் மரியன் எனும் இடத்­தி­லுள்ள ஹங்றி மதர் பூங்­காவில் இடம்­பெற்­றது. இந்த திரு­மண செல­விற்­கான பணத்தை அவர்கள் பொது­மக்­களின் நன்­கொ­டைகள் மூலம் பெற்­றி­ருந்­தனர்.

ஜஸ்டிஸ் 10 வயது சிறு­மி­யாக இருந்த போது பாட­சா­லையில் ஜெர­மியை முதன் முத­லாக . காலப் போக்கில் அவர்­க­ளி­டையே காதல் மலர்ந்­தது.இந்­நி­லையில் 2012 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் ஜெரமி திரு­மணம் செய்­வ­தற்­கான தனது விருப்­பத்தை ஜஸ்டிஸிடம் வெளியிட்டார்.தொடர்ந்து கடந்த வருடம் ஆகஸ்ட் முதலாம் திகதி அவர்கள் முதல் தடவையாக திருமண பந்தத்தில் இணைந்தனர்.