இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை இணையத்தில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய முயற்சிக்கும் சவுதி எஜமான்!!

732

Auction

குறித்த இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை 25000 சவுதி ரியாலுக்கு விற்பனை செய்வதாக விளரம்பரம் செய்துள்ளார். உள்நாட்டு ஏல விற்பனை இணையத்தளமொன்றில் இந்த விளம்பரம் பிரசூரிக்கப்பட்டுள்ளது.

30 வயதான இலங்கைப் பணிப் பெண்ணை விற்பனை செய்ய விரும்புவதாகவும், ஒப்பந்தம் முடிவுறுத்திக் கொண்டுள்ளதாகவும் எஜமானர் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணிற்கு இன்னும் ஒரு ஆண்டு காலம் சேவையாற்ற அனுமதியிருப்பதாகவும் விரும்பியவர்கள் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அதிகளவான சம்பவங்கள் பதிவாவதாக சவுதி மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.