எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் புதிய கடவுச் சீட்டுக்கள் அறிமுகம்!!

590

Pasport

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் கைவிரல் அடையாளத்துடன் கூடிய புதிய கடவுச் சீட்டுக்கள் விநியோகிக்க குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 10 ஆம் திகதி தொடக்கம் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என்.ரணசிங்க கூறியுள்ளார்.

சர்வதேச தரத்திற்கு அமைவாக இலங்கையின் கடவுச் சீட்டுக்களை விநியோகிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

அத்தோடு கடவுச் சீட்டுக்களுக்கான புகைப்படங்களை பெற்றுக்கொள்ளும்போதும் புதிய நடைமுறையை பின்பற்றுவதற்கு குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் உத்தேசித்துள்ளது.

எதிர்காலத்தில் கடவுச் சீட்டுக்கான புகைப்படங்கள் ஒன்லைன் மூலம் மாத்திரமே பொறுப்பேற்கப்படும் என குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.