சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வௌிநாட்டுப் பணத்தை கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு இலட்சத்து முப்பதாயிரம் சவூதி ரியால்களை கடத்திச்செல்ல முற்பட்டவேளை சுங்க பிரிவு அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக அதன் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
தெமட்டகொடை பிரதேசத்தில் வசிக்கக்கூடிய 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.iலங்கை ரூபாய்படி 46 இலட்சத்து 87,254 ரூபாய் பெறுமதியான சவூதி ரியால்களையே கடத்திச் செல்ல முற்பட்டுள்ளார்.
நேற்றிரவு யூ.எல் 281 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் ஜித்தா நகர் நோக்கி புறப்பட இருந்ததாக லெஸ்லி காமினி தெரிவித்தார்.