மலையக ரயில் பாதையின் வட்டவல புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி நேற்றிரவு புறப்பட்டுச் சென்ற தபால் புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
இன்று அதிகாலை 1.38 மணியளவில் இந்த புகையிரதம் தடம் புரண்டதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் மற்றொரு என்ஜினின் உதவியுடன் அந்த புகையிரதத்தின் பயணம் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த புகையிரதம் சிறிது நேரம் தாமதித்திருந்தாலும், இன்று காலை கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரத சேவை வழமை போல் சேவையில் ஈடுபட்டதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.