பாகிஸ்தானில் கன மழை: 116 பேர் பலி, 7½ இலட்சம் பேர் தவிப்பு!!

470

RTR2GZ83-Pakistanபாகிஸ்தானில் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டுகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள் நிரம்பியதால் திறந்து விடப்பட்டுள்ள வெள்ளம் ஊருக்குள் பாய்ந்ததால் வீடுகள் மற்றும் விளை நிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

மீட்பு பணியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. மொத்தம் 4½ இலட்சம் இராணுவ வீரர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழை வெள்ளம் மற்றும் வீடுகள் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 116 பேர் பலியாகினர். மேலும் 7 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வீடுகள் இன்றி தவிக்கின்றனர். வெள்ளப்பகுதிகளில் சிக்கியுள்ளனர்.