இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்த்தன இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக நியமனம் பெற்றுள்ளார்.கடந்த 18 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரராக திகழ்ந்த மஹேல ஜயவர்த்தன பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராவார்.
இதேவேளை, இங்கிலாந்து அணியின் முழுநேர ஆலோசகராக மஹேல செயற்படமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் வருடத்தின் அதிகளவான காலப்பகுதியை இங்கிலாந்து அணிக்காக செலவிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.