ஜேர்மனியில் மீன் தொட்டி விரும்பிகளுக்கென அமைக்கப்பட்ட ஒரு தனித்தன்மையான ஹோட்டல்!!

337

Raison-Blu

ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள ரேடிசன் ப்ளு ஹோட்டலில், தங்கும் அனுபவத்தை மாற்றியமைக்கும் விதமாக அங்கே மீன் தொட்டி ஒன்றை அமைத்துள்ளனர். மீன் தொட்டியில் என்ன வித்தியாசம் என்கிறீர்களா? நம் வீட்டில் தங்கமீன் வளர்க்க பயன்படும் தொட்டியல்ல இது!

இந்த தொட்டி உலகின் மிகப்பெரிய அளவிலான 82 அடி நீள சிலிண்டர் வடிவ தொட்டியாகும். இது ஒரு மில்லியன் லிட்டர் தண்ணீரில் சுமார் 97 வகையான 1500 மீன்கள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, மீன்களை அருகாமையில் கண்குளிரப் பார்க்க எண்ணுபவர்களுக்கென இந்த தொட்டிக்கு நடுவே நகரும் மின்தூக்கியும் அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள மீன்களுக்கு ஒவ்வொரு நாளும் 2 மணியளவில் சுமார் 8 கிலோ உணவு கொடுக்கப்படுவதையும் இந்த ஹோட்டலில் விருந்தினர்களாக தங்குபவர்கள் கண்டுகளிக்கலாம். இந்தத் தொட்டியின் கண்ணாடியை ஒவ்வொரு நாளும் 3 அல்லது 4 முறை சுத்தம் செய்ய டைவ் அடிப்பவர்களும் பிரத்யேகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

நீருக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையின் மூலமும் நடந்து சென்றும், இந்த தொட்டியில் இருக்கும் மீன்களைப் பார்க்கலாம். ஆகையால், இனிமையான அனுபவங்களுக்காக நிச்சயம் செல்ல வேண்டிய இடங்களில் ஒன்றாக இந்த ஹோட்டல் விளங்கி வருகிறது.