தமிழில் டுவிட்டர் வந்தாச்சு!!

520

Twitter-has-arrived-in-Tamil_SECVPF (1)

72 வார்த்தைக்குள் குறுகிய செய்தியாக கருத்துப் பரிமாற்றத்தை உருவாக்கி பிரபலமடைந்த சமூக வலைத்தளம் டுவிட்டர். தற்போது இந்த வலைத்தளத்தில் நேரடியாக தகவல்களை போஸ்ட் செய்யும்போது 10 ஆயிரம் வார்த்தைகள் வரை பயன்படுத்தலாம். அதற்கு பதிலாக டுவிட் செய்யும்போது 72 வார்த்தைகளையே பயன்படுத்த முடியும்.

இதுவரை டுவிட்டர் தளம் ஆங்கிலத்தில் மட்டுமே செயல்பட்டு வந்தது. ஆனால் டுவிட்டுகளை தமிழில் வெளியிடலாம். சமீப காலமாக மண்டல மொழிகளில் செயல்படும் வகையில் டுவிட்டர் தளம் மேம்படுத்தப்பட்டு வந்தது. அதன்படி முதலில் இந்திய மொழிகளில் இந்தி மற்றும் வங்காள மொழிகளில் டுவிட்டர் அப்ளிகேசன் வந்தது.

தற்போது மேலும் 4 இந்திய மொழிகளில் இது செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. இதில் தமிழும் அடக்கம். இனி தமிழில் டுவிட்டர் இயக்கலாம்.

புதிதாக அறிமுகமாகி உள்ள விண்டோஸ்10 இயங்குதளத்தில் செயல்படும் வகையிலும் டுவிட்டர் மேம்படுத்தப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.