கணினி விளையாட்டுகளால் ஏற்படும் அபாயம்!!

313

Playstation-banned

கணினியானது பல்வேறு வயதினரையும் பல்வேறு விதங்களில் ஈர்த்துள்ளது. ஒருவருக்கு சமூக வலைத்தளங்கள் பிடிக்கும் என்றால், இன்னொருவருக்கு ‘கம்ப்யூட்டர் கேம்ஸ்’ எனப்படும் கணினி விளையாட்டுகள் பிடிக்கும்.

ஆரம்பத்தில், கணினி விளையாட்டுகளால் நன்மையே ஏற்படுகிறது, மூளை கூர்மை அடைகிறது என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இவற்றின் மோசமான முகங்கள் வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றன. இந்த தீமைகளை எடுத்துக்காட்டுவதற்கு பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமாக உள்ளது.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில் நான்கில் ஒரு சிறுவர் கணினி விளையாட்டுகளை ஒரு பயிற்சி என எண்ணுகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படி எண்ணுவதால் சிறுவர்கள் கணினி விளையாட்டுகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிப்பதாகவும், இதனால் பல எதிர்விளைவுகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், நேரம் காலம் மறந்து எந்நேரமும் கணினி முன் தவம் கிடப்பதும் ஒன்று.

5 முதல் 16 வயதுக்கு இடைப்பட்ட ஆயிரம் சிறுவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.