வியாபாரத் துறையில் உள்ளவர்கள் தங்கள் வியாபார நடவடிக்கைகளை சுதந்திரமாக செய்வதற்கென உள்ள உரிமையை இயன்றளவு உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் உயர்நிலை வியாபாரிகள் தொடக்கம் வீதியில் ரம்புட்டான் விற்பவர்கள் வரை அரசியல் அழுத்தத்திற்கு உள்ளான யுகத்தை தற்போதைய அரசாங்கம் இல்லாது செய்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2015 பொருளாதார மாநாட்டுக்கு இணையான கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
ஜனவரி 8ம் திகதி மக்கள் வைத்த எதிர்பார்ப்பை ஒருபோதும் வீணடிக்க இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.