பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பரீட்சை எழுதிய மாணவன்!!

453

exam-sittingகொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பாடசாலை மாணவன் இன்று உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார். சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புடன் இன்று காத்தான்குடியிலுள்ள பரீட்சை நிலையமொன்றில் இவர் பரீட்சை எழுதியுள்ளார்.

இவருடன் இன்னொரு மாணவனும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் வேறு துறையில் கற்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. காத்தான்குடியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து முப்பதரை பவுன் தங்க நகைகள், ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணம், என்பவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.

இவர்கள் கொள்ளையிட்ட இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் வாவியில் வீசி விட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.