இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் ஹர்தா பகுதியில் நேற்றிரவு இரண்டு ரயில்கள் தடம்புரண்டதில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 25 ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ரயில்கள் மச்சக் ஆற்றின் மேம்பாலத்தை கடக்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த பகுதிளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக குறித்த ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. வெள்ளம் ரயில் தண்டவாளத்தை மூழ்கும் அளவுக்கு இருந்தமையால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.