கனடாவில் ஏழு பேர்களை காப்பாற்றிய தாய் பரிதாப மரணம்!!

547

mother-dead

கனடா- நோவ ஸ்கோசிய கடற்கரை ஒன்றில் தனது இரண்டு பிள்ளைகள் உட்பட்ட ஏழுபேர்களை வலுவான நீரோட்டத்திலிருந்து காப்பாற்றிய தாய் ஒருவர் மரணமடைந்தார். மற்றய நீச்சல் காரர்கள் இவரை ஒரு ஹீரோ என அழைத்தனர். நோவ ஸ்கோசியாவில் சிட்னி பகுதி மேற்கில் அமைந்துள்ள மக்லியோட் பீச் தண்ணீருக்குள் சிக்கிய நீச்சலாளர்களை காப்பாற்ற தண்ணீருக்குள் குதித்த வயது வந்தவர்களில் மிசெல் கேட்டிசும் அவரது சகோதரி கென்றா போல்ட்வின்னும் அடங்கினர்.

இருவரும் 40-ற்கும் மேற்பட்ட நண்பர்கள் குடும்ப அங்கத்தவர்களுடன் முகாம் பயணத்தை மேற்கொண்டு குறிப்பிட்ட கடற்கரைக்கு சென்றிருந்தனர். அங்கு பல சிறுவர்களும் கேட்டிசின் மகன், மகள் மற்றும் பலரும் நீந்த சென்றுள்ளனர். ஆனால் நிலைமை ஆபத்தானதாக அமைந்தது. நீந்த சென்றவர்களை நீரோட்டம் இழுத்து செல்ல தொடங்கியது.

நோய்த்தணிப்பு மருத்துவ தாதியான கேட்டிஸ் முதலாவது ஆளாக சிறுவர்களை பாதுகாப்பாக கொண்டு வர ஆரம்பித்தார். கரையை வந்தடைந்ததும் கேட்டிஸ் சுகயினமடைய ஆரம்பித்தார். நீந்த சென்றவர்கள் அனைவரும் பாதுகாப்பாக கரையை வந்தடைந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் கேட்டிஸ் சரிந்துவிட்டார்.



அவசர மருத்துவ சேவையினர், நண்பர்கள், கூட நின்றவர்கள் முயன்றும் காப்பாற்ற முடியாத நிலையில் அந்த இடத்திலேயே இறந்து விட்டார். பல பிள்ளைகளையும் தனது மகன், மகள் ஆகியோரையும் காப்பாற்றி ஹீரோ என அனைவராலும் பாராட்டப்பட்ட கேட்டிஸ் தனது உயிரை இழந்தார். அனைவராலும் விரும்பபட்ட ஒரு சிறந்த மாது என அவர் பணிபுரிந்த வைத்தியசாலை அவரை பாராட்டியது. இறப்பிற்கான காரணம் உறுதிப்படுத்தப் படவில்லை