இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டி மூட்டை கட்டிய மர்ம நபர் யார்??

428

Murder-logo1பிரான்ஸ் நாட்டில் இளம்பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பையிற்குள் மறைத்து வைத்திருந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் Toulouse என்ற நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து தீயணைப்பு வீரர்களுக்கு பெண் ஒருவர் தன்னுடைய மகளை 2 வாரங்களாக காணவில்லை என புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று அங்கு வந்த தீயணைப்பு வீரர்களிடம், ஒரு வீட்டை சுட்டிக்காட்டி அது சில நாட்களாக மூடியே இருப்பதாக கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, அந்த குறிப்பிட்ட வீட்டின் கூரை மீது ஏறிய வீரர்கள், அங்கிருந்து வீட்டிற்குள் குதித்துள்ளனர். அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த கணமே மிக கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. பின்னர் அந்த அறையை சோதனை செய்ததில் ஒரு பிளாஸ்டிக் பையில் இளம்பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர்.

ஆனால், அருகில் குடியிருந்தவர்கள் அது காணாமல் போன இளம்பெண்ணின் உடல் அல்ல என கூறியுள்ளனர். வெட்டப்பட்ட உடல் பாகங்கள் 10 நாட்களுக்கு மேல் அங்கேயே இருந்துள்ளதால், உடல் அழுகிய நிலைக்கு சென்றுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னரே அது காணாமல் போன இளம்பெண்ணின் உடலா? இந்த கொலையை செய்தவர்கள் யார், எதற்காக செய்தார்கள் என்ற கேள்விகளுக்கு விடை தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.