விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ளது.இந்திய – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 12ஆம் திகதி காலி மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பு 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது இந்திய அணி.அதன்படி இந்திய அணி இலங்கை கிரிக்கெட் தலைவர் லெவனுடன் மோதும் பயிற்சி ஆட்டம் கொழும்பில் இன்று தொடங்குகிறது.
இந்தப் போட்டியின் இலங்கை அணிக்கு லஹிரு திரிமான்ன அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாட இந்த பயிற்சி ஆட்டத்தை இந்திய வீரர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்திய அணியில் திறமையை நிரூபிக்க கூடிய வீரர்களுக்கு தான் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் துடுப்பாட்ட வீரர்களும், பந்து வீச்சாளர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்த கடுமையாக போராடுவார்கள்.
தவான், முரளிவிஜய், ராகுல், புஜாரா, ரோகித்ஷர்மா ஆகியோர் தங்களது இடத்தை உறுதி செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களில் இஷாந்த்சர்மா, புவனேஷ்வர்குமார், வருண் ஆரோன் ஆகியோரில் இருவர் தான் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெற இயலும். இதனால் அவர்கள் பயிற்சி ஆட்டத்தில் விக்கெட் டுகளை வீழ்த்த போராடுவார்கள்.