வவுனியா தோணிக்கல் ஸ்ரீ வீரகருமாரி காளி அம்மன் ஆலய வருடாந்த ஆடிச் செவ்வாய் பழமடையும் ஆடிப்பூர திருவிழாவும்!!

416

ko

சிறப்புமிகு இலங்கைத் திருநாட்டின் வளமிகு வவுனியா மாநகரின் எளிமையான தோணிக்கல் பதியிலே வீட்டிருக்கும் அகில உலகங்களையும் படைத்துக் காத்து அனைத்து மாந்தர்களுக்கும் உலக அன்னையாகவும் ஓங்கார சக்தியாகவும் விளங்கும் ஸ்ரீ வீரம்மாகாளி அம்பிகைக்கு நிகழும் சர்வமங்களகரமான மன்மத வருடம் ஆடி மாதம் 26ம்நாள் (11.08.2015)அதாவது 04ம் ஆடிச்செவ்வாயை முன்னிட்டு ஸ்ரீ வீரம்மாகாளி அம்பிகையின் வருடாந்த பழமடைகுளிர்த் திவிழா நடைபெற திருவருள் கூடியுள்ளது.

முதல் நிகழ்வாக மாலை 6.00 மணியளவில் அம்பிகைக்கு தீப ஆராதனைகளும் தொடர்ந்து 108 நாம குங்கும அர்ச்சனையும் பழமடைத் திருவிழாவும் நடைபெறும். அத்துடன் விசேட நிகழ்வான அம்பிகையின் சக்திக் காப்பான ஆடிக்காப்பும் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து அம்பாளின் ஆசியுடன் திருவருள் பிரசாதமும் வழங்கப்படும்.

(16.08.2015) ஞாயிற்றுக்கிழமை அன்று ஆடிப்பூரத் திருவிழா நடைபெற திருவருள் கூடியூள்ளதால் அன்று காலை 10.00 மணியளவில் அண்ணா வீதியில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ அதிசய விநாயகப் பெருமான் ஆலயத்தில் இருந்து பால்குடம் எடுத்துவரப்பட்டு அம்பாளுக்கு பாலறுகு சாற்றி அபிஷேகம் இடம்பெறும்.

அதனைத் தொடந்து மகேஸ்வர பூஜை (அன்னதானம்) வைபவம் நடைபெறும். மாலை 5.00 மணியளவில் ஸ்ரீ அதிசய விநாயகப் பெருமான் ஆலயத்திலிருந்து சீர்வரிசை எடுத்துவரப்பட்டு அம்பிகையின் ருது சோபனசாந்தி விழாவான ஆடிப்பூர நிகழ்வு வைபவம் இனிதே இடம்பெறும்.

17.08.2015 திங்கட்கிழமை அன்று சிவ அம்சசொருபமாகிய ஸ்ரீ வைரவப் பெருமானுக்கு வைரவர் மடையும் இனிதே இடம் பெறும்.

எனவே பக்த அடியவர்கள் அனைவரும் இவ் வைபவத்தில் கலந்து சிறப்பித்து அன்னையின் அருட்கடாட்சத்தையும் இஷ்ட சித்திகளையும் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்