மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு கோரி இன்று காலை மட்டக்களப்பு நகரில் பாரிய பேரணி இடம்பெற்றது.
போதை ஒழிப்பு வாரத்தையொட்டி மண்முணை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்தது.
பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் இடம்பெற்ற இப்பேரணியில் பல்வேறு திணைக்களங்களும் பொது அமைப்புக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.