உலகக் கிண்ண வலைப்பந்தாட்டம் சிட்னியில் ஆரம்பம் : ஆசியாவின் முதல் நிலை நாடுகள் இன்று மோதல்!!

562


Netball_action

சர்­வ­தேச வலை­ப்பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் மேற்­பார்­வையில் அவுஸ்­தி­ரே­லிய வலைப் ­பந்­தாட்ட சங்கம் முன்­னின்று நடத்தும் 14ஆவது உலகக் கிண்ண வலை­ப்பந்­தாட்டப் போட்­டிகள் சிட்னி ஒலிம்பிக் பார்க் உள்­ளக அரங்கில் இன்று முதல் எதிர்­வரும் 16ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளன.
10 தட­வைகள் சம்­பி­ய­னா­னதும் நடப்பு சம்­பி­ய­னு­மான அவுஸ்­தி­ரே­லியா, முன்னாள் சம்­பி­யன்­க­ளான நியூ­ஸி­லாந்துஇ ட்ரினிடாட் அண்ட் டுபாகோ ஆகி­யன உட்­பட 16 நாடுகள் இவ் வருட உலகக் கிண்ண வலைப்­பந்­தாட்டப் போட்­டி­களில் பங்­கு­பற்­று­கின்­றன.



முன்னாள் ஆசிய சம்­பி­ய­னான இலங்கை தனது முத­லா­வது போட்­டியில் நடப்பு ஆசிய சம்­பியன் சிங்­கப்­பூரை இன்று சந்­திக்­க­வுள்­ளது.

இந்தப் போட்டி சிட்னி ஒலிம்பிக் பார்க் விளை­யாட்­ட­ரங்கில் அமைந்­துள்ள நெட்போல் சென்ட்ரல் உள்­ளக அரங்கில் சிட்னி நேரப்­படி முற்­பகல் 11.50 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது.



மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் சிங்­கப்­பூ­ரிடம் அடைந்த தோல்­விக்கு பிரா­யச்­சித்­த­மாக இன்­றைய போட்­டியில் வெற்­றி­பெற்று ஆசி­யாவின் முதல் நிலை வலைப்­பந்­தாட்ட அணி என்­பதை இலங்கை நிரூ­பிக்கும் என இலங்கை அணி பயிற்­றுநர் தீப்தி அல்விஸ் தெரி­வித்தார்.



உலகக் கிண்ணப் போட்­டி­களை முன்­னிட்டு இரண்டு மாதங்கள் மாத்­தி­ரமே இலங்கை அணி பயிற்­சியில் ஈடு­பட்ட போதிலும் வீராங்­க­னைகள் சர்­வ­தேச தரத்­திற்­கேற்ப முழுத் திற­மை­யையும் வெளிப்­ப­டுத்த காத்­தி­ருக்­கின்­றனர் என அவர் கூறினார்.


தீப்தி அல்­விஸின் மகள் செமினி அல்விஸ் இலங்கை அணியின் தலை­வி­யா­கவும் கயனி திசா­நா­யக்க உதவி அணித் தலை­வி­யா­கவும் விளை­யா­டு­கின்­றனர்.

இவர்­களை விட திசலா அல்­கம, தர்­ஷிகா அபே­விக்­கி­ரம, தீபிகா தர்­ஷனி அபேகூன், சத்­து­ரங்கி ஷானிக்கா, சுரேக்கா குமாரி, விராஜி சாம­ரிக்கா, ஹசித்தா மெண்டிஸ், தில்லினி தினேஷிக்கா வத்தேகெதர, கிம்ஹானி கயாஞ்சலி அமரவன்ச, ஜொசஃபின் நிரோஷினி பாய்வா ஆகியோரும் இலங்கை வலைப்பந்தாட்டக் குழாமில் இடம்பெறுகின்றனர்.