விஷாலை விரும்பும் கமலின் மகள்!!

475

Akshara-Haasan

கமலஹாசனின் 2–வது மகள் அக்க்ஷரா. இவர் ஹிந்தியில் தனுஷ் ஜோடியாக ‘ஷமிதாப்’ படத்தில் நடித்தார். தமிழில் விஷாலுடன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அக்க்ஷராஹாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது-

நான் விஷாலுடன் நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவருடன் நடிப்பது குறித்து இதுவரை யாரும் என்னிடம் பேசவில்லை. எந்த தமிழ் படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை. வாய்ப்பு வரும்போது நிச்சயம் தமிழ் படங்களில் நடிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே அக்க்ஷராவை தமிழ் படம் ஒன்றில் நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.