இதுவரை 500 க்கும் அதிகமானோர் கைது!!

336

arrested-759

தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை 512 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் மற்றும் தேர்தல் சம்பந்தமாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பிலும் மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற 176 முறைப்பாடுகள் சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் 404 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற 205 முறைப்பாடுகளுக்கமைய சந்தேகத்தின் பேரில் 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 969 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின் தேர்தல் முறைப்பாட்டு பிரிவு தெரிவிக்கின்றது.

தேர்தல்கள் திணைக்களத்திற்கு பதிவாகியுள்ள அதிகளவான முறைப்பாடுகள், சட்டங்களை மீறி போஸ்டர்கள், கட்அவுட்கள் மற்றும் பதாதைகளை ஒட்டுதல் சம்பந்தமாக என்பதுடன் அவை தொடர்பில் 216 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.