
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். நாய்கள் , பூனைகள் மீது நடிகைகளுக்கு நிறைய பாசமுண்டு. இதிலிருந்து மாறுபட்டிருக்கிறார் லட்சுமிராய்.
இதுபற்றி அவர் கூறியது: துபாயில் உள்ள என் நண்பரின் வீட்டுக்கு சென்றேன்.தனியார் மிருக காட்சி சாலைபோல் வீட்டின் ஒரு பகுதி அமைக்கப்பட்டிருக்கிறது. நிறைய விலங்குகள் வளர்கின்றன.
புலி, சிங்கம் போன்றவையும் உள்ளன. அங்குள்ள சிங்கக்குட்டி பிஜ்லியை பார்த்ததும் எனக்கு அதன் மீது காதல் பிறந்துவிட்டது. நெருங்கி செல்ல முதலில் பயமாக இருந்தது. லேசாக தடவிவிட்டபடி நெருங்கியபோது என்னுடன் விளையாட ஆரம்பித்து விட்டது. எனக்கு மிகவும் பிடித்தும் விட்டது.
அதனுடனே வீட்டை சுற்றி சுற்றி விளையாடிக் கொண்டிருந்தேன். என்னுடனும், தோழியுடனுமே அது உணவு சாப்பிட்டு அருகிலேயே படுத்துக்கொண்டது.
சிங்கம் வளர்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை. ஆனால் இந்தியாவில் சட்ட விதிகளின்படி அது நடக்காது. இவ்வாறு லட்சுமி ராய் கூறினார்.





