
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் ஒருதொகை மருந்து மாத்திரைகளை கொண்டுவந்த நபரை கட்டுநாயக்க விமானநிலை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 13 இலட்சத்து 34 ஆயிரம் ரூபா பெறுமதியான மருந்து மாத்திரைகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்தில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





