ரெய்னாவுக்கு தலைவர் பதவி நிராகரிக்கப்பட்டது ஏன் தெரியுமா??

287

Suresh-Raina_AFP_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சிம்பாவேயில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 20 ஒவர் போட்டிகளில் விளையாடியது.

ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இந்த தொடரில் டோனி, வீராட் கோலி, ரெய்னா, தவான், அஸ்வின் உட்பட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் சிம்பாவே தொடரில் ரெய்னாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது ஏன் என்பது பற்றி பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி கூறி இருந்த சூதாட்ட குற்றச்சாட்டு காரணமாகவே அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. லலித்மோடி புகார் சிம்பாவே தொடருக்கான அணியை தேர்வு செய்ய தேர்வு குழு கடந்த ஜுன் 29-ம் திகதி கூடியது.

தேர்வு குழு கூடுவதற்கு 2 தினங்களுக்கு முன்பு தான் ஐ.சி.சி.க்கு லலித்மோடி அனுப்பி இருந்த இமெயில் வெளியாகி இருந்தது.

ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரெய்னா, ஜடேஜா, பிராவோ ஆகிய 3 பேரும் பணம் மற்றும் வீடுகளை இலஞ்சமாக பெற்று இருந்ததாக லலித்மோடி குற்றம்சாட்டி இருந்தார்.

இதை ரெய்னா ஏற்கனவே மறுத்து இருந்தார். சிம்பாப்வே தொடரில் ரெய்னாவை தான் தலைவராக நியமிக்க தேர்வு குழு முடிவு செய்து இருந்தது.

ஆனால் கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாக்கூர் தேர்வு குழுவை தொடர்பு கொண்டு ரெய்னாவை தேர்வு செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார்.

இதை தொடர்ந்தே சிம்பாவே தொடருக்கு ரகானே தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ரெய்னா குறித்து அப்போது அனுராக் தாக்கூரிடம் கேட்டபோது, ஐ.சி.சி.யிடம் இருந்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை.

இதனால் அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்று கூறி இருந்தார். லலித்மோடி கூறிய குற்றச்சாட்டு காரணமாகவே ரெய்னாவுக்கு சிம்பாப்வே தொடரில் தலைவர் பதவி நழுவியது தற்போது தெரியவந்துள்ளது.

2010-ம் ஆண்டு இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

அப்போது சூதாட்ட தரகருடன் நெருங்கிய தொடர்புடைய பெண் ஒருவருடன் ரெய்னா ஹோட்டலில் அறையில் தங்கி இருந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டு இருந்தது. இதை கிரிக்கெட் வாரியம் நிராகரித்து இருந்தது.