படுக்கைக்கு முன் விளக்கை அணைப்பது யார்..விவாகரத்தில் முடித்த புதினம்!!

368

divorce

படுக்­கைக்கு செல்­வ­தற்கு முன்னர் யார் மின்­வி­ளக்கை அணைப்­பது என்­பது தொடர்­பான சர்ச்சையால் எகிப்­திய பெண்­ணொ­ருவர் தனது கண­வ­ரி­ட­மி­ருந்து விவா­க­ரத்து கோரி நீதிமன்­றத்தை நாடி­யுள்ளார். திரு­ம­ண­மாகி ஒரு வரு­டமே கடந்த நிலையில், இப்பெண் விவா­க­ரத்து கோரி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

தனது கண­வ­ரு­ட­னான வாழ்க்­கையில் அற்­ப­மான விட­யங்­க­ளுக்­கு­கூட வாக்கு­வாதம் ஏற்­ப­டு­வ­தாக எகிப்­திய தலை­நகர் கெய்­ரோ­வி­லுள்ள நீதி­மன்­ற­மொன்றில் மேற்­படி பெண் தெரி­வித்­துள்ளார். “படுக்­கைக்கு செல்­வ­தற்கு முன்னர் யார் விளக்கை அணைப்­பது என்­பது போன்ற மிக அற்­ப­மான விட­யங்­க­ளுக்கு­ கூட எமக்­கி­டையே வாக்­கு­வாதம் ஏற்­ப­டு­கி­றது.

காலையில் எத்­தனை மணிக்கு விழித்­தெ­ழு­வது, உணவு தொடர்­பான விட­யங்­க­ளுக்கும் வாக்­கு­வாதம் ஏற்­ப­டு­கி­றது. இதனால் எனது கண­வ­ருடன் தொடர்ந்தும் இணைந்து வாழ நான் விரும்­ப­வில்லை” என அப்பெண் தெரி­வித்­துள்ளார். இப்­பெண்ணின் கணவர் விவாக­ரத்து செய்­வ­தற்கு விரும்­ப­வில்லை எனக் கூறி­யுள்ளார்.

ஆனால், திரு­ம­ணத்தின் பின்னர் தனது மனைவி மிக மாற்­ற­மடைந்­து­விட்­ட­தாக அவர் கூறு­கிறார். “அவள் எவ்­வித கார­ணமுமின்றி, 24 மணித்­தி­யா­லங்­களும் அழு­து­ கொண்­டி­ருக்­கிறாள். அவள் தொடர்பில் நான் பொறு­மை­யுடன் இருக்­கிறேன். விவா­க­ரத்து செய்ய விரும்­ப­வில்லை” என நான் தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளேன்” என மேற்படி நபர் தெரிவித்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.