325,000 ரூபா செலவில் கோழிக்கு செயற்கை கால்!!

317

11455chikan

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர், தான் வளர்க்கும் கோழிக்கு செயற்கை கால் பொருத்­து­வதற்­காக 2500 அமெ­ரிக்க டொலர்­களை (சுமார் 325,000 இலட்சம் ரூபா) செல­விட்­டுள்ளார். மசா­சூசெட்ஸ் மாநி­லத்தைச் சேர்ந்த அன்ட்­ரியா மார்ட்டின் எனும் பெண், கோழிப் பண்­ணை­யொன்றை நடத்தி வரு­கிறார்.

கோழி­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிப்­பதில் தேர்ச்சி பெற்ற பண்ணை இது. அங்­குள்ள 3 மாத வய­தான கோழி­யொன்றின் கால் அசா­தா­ர­ண­மான வகையில் வளைந்து காணப்­பட்­டது. “அது ஒரு கோழி­தானே என எண்­ணாமல் அக்­கோ­ழியை டவ்ட்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தின் கம்மிங்ஸ் மிரு­க ­வைத்­தி­யத்­து­றைக்கு கொண்­டு­ சென்றார் அன்ட்­ரியா.

அக்­கோ­ழிக்கு செயற்கை கால் பொருத்­தலாம். அதற்கு 2,500 டொலர்கள் செல­வாகும் என மருத்­து­வர்கள் தெரி­வித்­தனர். அக்­கோழி சாதா­ர­ண­மான முறையில் வாழ வேண்டும் என தான் விரும்­பு­வ­தாக கூறிய அன்ட்­ரியா மார்ட்டின், செயற்கை கால் பொருத்­து­வ­தற்­கான செலவை ஏற்­றுக்­கொள்­வ­தாக தெரி­வித்தார்.
“பற­வை­க­ளுக்கு சத்­தி­ர­சி­கிச்சை செய்­வது மிக சிக்­க­லா­னது. ஆனால், இச்­சத்­தி­ர­சிகி­சையால் அக்­கோழி மிக மகிழ்ச்சியடையும். எனவே அச்சிகிச்சை பெறுமதியானது” என அன்ட்ரியா மார்ட்டின் கூறியுள்ளார்.