அஜித்தின் சினி பிரபல ரசிகர்கள் வரிசையில் இணைந்த ஆரியா!!

273

1855052462yatchan

யட்சன் படத்தில் ஆர்யா அஜித்தின் ரசிகராக வருகிறார் என்பது, படப்பிடிப்பில் இருக்கும்போதே தெரிந்ததுதான். அஜித்வாழ்க என்று கோஷம் போடுவதுடன், அஜித்ரசிகர் என்பதை கடந்து போவார்கள் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால், படத்தின் முன்னோட்டம் அப்படியில்லை என்று சொல்கிறது.

யட்சன் படத்தின் முன்னோட்டம் ஆரம்பித்ததுமே அஜித் புகழ்தான். மூணு நாள்ல தல படம் வெளியாகும். தாரை தப்பட்டை அடிச்சு நொறுக்கணும்யா என்று ஆர்யா கூற, அடுத்து வரும் காட்சியில் அஜித்தின் ஆகாச அளவு கட்டவுட்டில் ஏறி பாலாபிஷேகம் செய்கிறார்.

தமிழ் சினிமாவில் சிம்பு, ஆர்யா, ஜெய், பிரேம்ஜி, வெங்கட்பிரபு, விஷ்ணுவர்தன், வைபவ் என்று அஜித்தின் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள். அதன் விளைவுதான் இந்த காட்சிகள்.

சரி, யட்சன் என்றால் என்ன பொருள்? குபேரன் என்று அர்த்தமாம். பேசாமல் ரசிகன் என்று வைத்திருக்கலாம்.