
1995-ம் ஆண்டில், ‘காதல் தேசம்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான அப்பாஸ் பரபரப்பான கதாநாயகனாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத காரணத்தால் அப்பாஸ் சென்னையில் உள்ள தனது சொத்துக்களை எல்லாம் விற்று விட்டு, குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் குடியேறி விட்டார். அங்கு அவர் சொந்தமாக தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது!
ஸ்ரீதிவ்யா நடித்த படங்கள் எல்லாம் ஓடுகின்றன என்று ஒரு தகவல் தமிழ் சினிமாவில் திட்டமிட்டு பரப்பப்பட்டது. அதற்கேற்ப ஸ்ரீதிவ்யா தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தினார். இப்போது அவர் கேட்கும் சம்பளத்தை கேட்டு தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் ஓட்டம் பிடிக்கிறார்கள். (ஸ்ரீதிவ்யா கேட்கும் சம்பளம், ரூ.60 லட்சம்!)





