பாதங்களில் கொம்பு முளைத்த அதிசய பெண்!!

582

leg_corn_003

சவுதி அரேபியாவை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு கால் பாதத்திற்கு கீழ் விநோதமாக 3 கொம்புகள் முளைத்திருப்பதால் பல வருடங்களாக நடக்க முடியாமல் தவித்து வருவதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன.

ரியாத் மாகாணத்தில் உள்ள Wadi Al Dawasir என்ற நகரில் 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்னர், சாலையில் நடந்தபோது இரும்பு உலோகம் ஒன்றின் மீது அவருடைய கால் பதிந்து காயம் ஏற்பட்டு விடுகிறது.

காயத்திற்கு மருத்துவம் பார்த்ததற்கு பின்னர் சில நாட்களுக்கு எந்த தொந்தரவும் இன்றி வாழ்ந்துள்ளார். ஆனால், சில வாரங்களுக்கு பிறகு காயம் பட்ட இடத்திலிருந்து கொம்புகள் போன்று ஏதோ நீட்டிக்கொண்டு வளர்ந்து வந்துள்ளது. இதனை பார்க்க பெரு விரலில் முளைக்கும் நகங்கள் போலவும் காட்சியளித்துள்ளது.

விநோதமான கொம்புகளால் அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி மருத்துவரை நாடியுள்ளார். கால் பாதத்தில் கொம்புகள் முளைக்கும் காரணம் புரியாத மருத்துவர் அவற்றி வெட்டி நீக்கியுள்ளார். ஆனால், அந்த கொம்புகள் மீண்டும் நீளமாக அதே இடத்தில் வளர தொடங்கியுள்ளது. இதனால் அவரால் நடக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார்.

பின்னர் உயர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது, அவர் தோல் வியாதியால பாதிக்கப்பட்டு இருந்துள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். மேலும் சில அதிநவீன பரிசோதனைகளை மேற்கொண்டபோது காலில் கொம்பு முளைத்ததற்கான காரணத்தையும் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

இது குறித்து பேசிய மருத்துவர்கள், மூதாட்டி தோல் வியாதியால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவருடைய கை விரல் நகங்களில் இருக்கும் புரோட்டீன்கள் அவரது பாதத்திற்கு கீழும் இருந்துள்ளது.
இதன் விளைவாக தான், கை விரல்களில் நகங்கள் வளர்வது போல அவருடைய கால் பாதத்திலும் நகங்கள் வளர்கிறது என விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த நோயை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது என்பதால், பாதத்தில் நகங்கள் வளரும்போதெல்லாம் மரண வலியை அனுபவிப்பதுடன் நடக்க முடியாமல் அந்த மூதாட்டி பெரும் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளார்.