வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள், காணொளி)

439

இன்று (11.08.2015) காலை 11.00 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் தங்களது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களின் புகைப்படத்தில் காணாமல்போன மூவர் காணப்படுவதாகவும், அவர்கள் தங்களது உறவுகள் எனவும் காணாமல்போனோரின் உறவுகள் தெரிவித்தனர்.

தேர்தல் காலங்களில் மாத்திரம் வேட்பாளர்கள் தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கு மாத்திரம் எங்களிடம் இணைந்து வாக்குறுதிகளைத் தருகின்றனர். தேர்தல் நிறைவுற்றதன் பின்னர் காணாமல்போன உறவுகளை ப் பற்றி கவனம் செலுத்துவதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

-பிராந்திய செய்தியாளர்-

1 2 3 4 5