
பருவ காலத்தில் நெல் கொள்வனவு செய்வதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதமரின் ஆலோசனைக்கமைய நெல் விநியோக சபை மூலம் நாடுபூராகவும் மாவட்ட மட்டத்தில் இந்த நெல் கொள்வனவு செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 137 மத்திய நிலையங்களில் நெற் கொள்வனவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படுகின்ற நெற்கள் 77 களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நெற்கொள்வனவு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக பிரதேச முகாமையாளர்களை ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்துள்ளதாக நெல் விநியோக சபை தெரிவித்துள்ளது.





