சொலமன் தீவு­களை உலுக்­கிய 6.9 ரிச்டர் பூமி­ய­திர்ச்சி!!

618

o-EARTHQUAKE-facebook

வட ஆப்­கா­னிஸ்­தானை 5.9 ரிச்டர் அள­வான பூமி­ய­திர்ச்சி திங்­கட்­கி­ழமை தாக்­கி­யுள்­ளது. இந்த பூமி­ய­திர்ச்சி இந்­திய காஷ்மீர் பிராந்­தியம் வரை உண­ரப்­பட்­டுள்­ளது.

இந்து குஷ்மலைப் பிராந்­தி­யத்தில் 224 கிலோ­மீற்றர் ஆழத்தில் தாக்­கிய இந்தப் பூமி­ய­திர்ச்­சியால் ஏற்­பட்ட சேத விபரங்கள் அறிக்கையிடப்படவில்லை.

சொலமன் தீவு­க­ளுக்கு அப்பால் 6.9 ரிச்டர் அள­வான பூமி­ய­திர்ச்சி திங்­கட்­கி­ழமை தாக்­கி­யுள்­ளது.ஹொனி­யரா பிராந்­தி­யத்­துக்கு மேற்கே 214 கிலோ­மீற்றர் தொலைவில் கடலின் கீழ் மையங்கொண்­டி­ருந்த பூமி­யதிர்ச்­சியால் கட்­ட­டங்கள் நடுங்­கியதால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

எனினும் மேற்­படி பூமி­ய­திர்ச்­சியால் சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக அறிக்கையிடப்படவில்லை.