இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு காலி சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.
இப் போட்டியை பொறுத்தவரை இரு அணிகளுக்கும் மிகமுக்கிய போட்டியாக அமைந்துள்ளது. ஏனெனில் இலங்கை அணியை பொறுத்தவரை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதால் இப்போட்டியில் வெற்றிபெற்று அவருக்கு அதை சமர்ப்பணம் செய்வதாக அமையும் அதேவேளை, இந்திய அணி கடந்த 22 வருடங்களாக இலங்கை மண்ணில் எந்தவொரு டெஸ்டிலும் வெற்றி பெற்றதில்லை.
எனவே இரு அணிகளுக்கும் இது முக்கிய போட்டியாக அமையும் அதேவேளை இரு நாட்டு அணி ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.





