சங்காவின் இறுதிப் போட்டியை மாணவர்கள் இலவசமாக காணலாம்!!

747

251221-01-02_15173808இந்தியாவுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டியுடன் இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

நாளை காலியில் நடைபெறவுள்ள இந்த போட்டியை பார்வையிடுவதற்கு தென்மாகாண பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது.

எனவே இந்த விசேட செய்தியை அனைத்து பாடசாலை அதிபர்களும் தமது மாணவர்களுக்கு தெரியப்படுத்தி இலங்கை கிரிக்கெட் துறையின் தூதுவராக தொழிற்படும் குமார் சங்கக்காரவுக்கு அளவற்ற சந்தோஷத்தையும் வெற்றியினையும் வழங்குமாறு கோரப்பட்டுள்ளனர் என, அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

போட்டி இடம்பெறும் தினத்தன்று அனைத்து மாணவர்களும் தமது பாடசாலை சீருடைகளுடன் வந்து தமக்கான இலவச டிக்கெட்டினை பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை கிரிக்கெட் சபை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.