தமிழ் சினிமா நட்சத்திர தம்பதியினரில் பிரசன்னா-சினேகாவும் ஒருவர். இவர்கள் காதலித்து இரு வீட்டார் சம்மதத்தோடு 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இன்று காலை அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இச்செய்தியை அறிந்த திரையுலகத்தினர் பலரும் தங்கள் வாழ்த்துக்களை அவர்களுக்கு கூறி வருகின்றனர்.
இதை தொடர்ந்து நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் அவரின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “என் ஏஞ்சல் சினேகா ஆழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்” என்று ட்விட் செய்துள்ளார்.





