வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்!!(படங்கள், காணொளி)

711

வவுனியா கலைமகள் சனசமூக நிலையத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நேற்று (10.08) மாலை 5 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இதன்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அங்கு உரையாற்றுகையில்..

நாட்டின் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இது முக்கியமான பிரச்சனை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பதில் வழங்கப்பட வேண்டும், மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும், உண்மை அறியப்படவேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறான நிலைப்பாடு இருந்தாலே நல்லாட்சி ஏற்படும். சுதந்திரமான தேர்தலின் பின் எமது பிரச்சினைக்கு ஒரு சர்வதேச விசாரணை நடைபெறவேண்டும்.

எமக்கு ஒரு அரசியல் தீர்வு தராவிட்டால் இன அழிவு ஏற்படக்கூடும். சர்வதேசம் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். அதுதான் எங்கள் செய்தி. இத் தேர்தலில் உங்கள் வாக்கு தெளிவான செய்தியை அனுப்பவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் வேட்பாளர்களான சிவசக்தி ஆனந்தன், விநோதாரலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், திருமதி சி.சாந்தி, சாள்ஸ், ரோய் ஜெயக்குமார், செல்லத்துரை, சிவநேசன், சிவமோகன், போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, எம்.பி.நடராஜ், லிங்கநாதன் மற்றும் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.

-பிராந்திய செய்தியாளர்-

20150810_170315 20150810_170320 20150810_171117 20150810_171120 20150810_171226 20150810_171247 20150810_171249 20150810_171300 20150810_171448 20150810_171452 20150810_172118 20150810_172133 20150810_172155 20150810_172750 20150810_174835 20150810_174837 20150810_175122 20150810_175301 20150810_175859 20150810_180738 20150810_183414 20150810_184235 20150810_190317 20150810_190322 SAM_1231 SAM_1235