மலையாள திரையுலகில் இருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் நடிகை அசின். தமிழில் விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்தார்.
இவர் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டதால், கோலிவுட் சினிமாவும் இவரை கைகழுவியது. பாலிவுட்டிலும் இவர் கடைசியாக நடித்த படங்கள் எதுவும் சரிவர ஓடாததால் அங்கேயும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்தார்.
தற்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு அபிஷேக் பச்சன் நடிக்கும் ‘ஆல் இஸ் வெல்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்த படத்தை முடித்த கையோடு அசின் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரபல தொழிலதிபர் ராகுல் சர்மா என்பவரைத்தான் அசின் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.
இருவரும் கடந்த 2 வருடங்களாக ஒன்றாக பழகி வருவதாகவும், இருவருக்குள்ளும் நல்ல புரிதல் இருப்பதால் திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.