தத்தெடுத்த குரங்கின் மீது சொத்துக்களை எழுதி வைக்கும் தம்பதிகள்!!

431

monkey-7உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்தவர் பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா (வயது48), இவரது மனைவி சபிஸ்தா (45). இவர்களுக்கு குழந்தை இல்லை. 10 வருடங்களுக்கு முன்பு தாயை இழந்த ஒரு குரங்கு குட்டியை இவர்கள் தத்தெடுத்தனர். அந்த குரங்குக்கு ‘சுன்முன்’ என்று பெயரிட்டு தங்கள் மகன் போல வளர்த்தனர்.

2004-ம் ஆண்டில் ஏழ்மை நிலையில் அவர்கள் இருந்தபோது அந்த குரங்கு அவர்களுக்கு கிடைத்ததும் அவர்கள் வாழ்விலும் அதிர்ஷ்டம் அடித்தது. அவர்களுக்கு இப்போது சொந்தமாக வீடு, நிலம் உள்ளது. பிரிஜேஷ் பல தொழில்களை சுன்முன் பெயரில் தொடங்கி நடத்தி வருகிறார். சபிஸ்தா வக்கீலாக இருக்கிறார்.

இதனால் அவர்கள் தங்களுக்கு பின்னர் தங்களது பல லட்சம் மதிப்புள்ள வீடு, நிலம் மற்றும் சொத்துக்களை அந்த குரங்கின் பெயருக்கு எழுதிவைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஒரு அறக்கட்டளையையும் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் அந்த குரங்கை கவனித்துக் கொள்ள முடியும். அந்த குரங்கு இறந்த பின்னர், காடுகள் அழிப்பு போன்ற சில காரணங்களால் வழிதவறி மக்கள் பகுதிக்கு வரும் குரங்குகளுக்கு உணவு வழங்கும் பணியில் அந்த அறக்கட்டளை ஈடுபடும்.

அந்த தம்பதி கூறும்போது, ‘‘மக்கள் எங்களை பைத்தியம் என்கிறார்கள். அவர்கள் சொல்லிவிட்டு போகட்டும். எங்களுக்கு குழந்தை இல்லாததால், ‘சுன்முன்’ தான் எங்கள் மகன். நாங்கள் இறந்த பின்னரும் அதன் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது. அதன் வழியில் அது தொடர்ந்து வாழ வேண்டும். அதற்கு சைனீஸ் உணவு வகைகள் மிகவும் பிடிக்கும். தேநீர் மற்றும் மாம்பழ ஜூஸ் விரும்பி குடிக்கும்’’ என்றனர்.