நேற்று 11.08.2015 செவ்வாய்கிழமையன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளருமான அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் கிராமங்களுக்கு மக்களின் பெரும் வரவேற்புக்கு மத்தியில் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார் .
வவுனியாவில் மகாரம்பைகுளம், காத்தார் சின்னக்குளம், மதீனா நகர் ,அரபா நகர், சுந்தரபுரம், சமயம்புரம், பாரதிபுரம், ஈஸ்வரிபுரம் ஆகிய தமிழ் முஸ்லிம் கிராமங்களுக்கு விஜயம் செய்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் போட்டியிடும் தமிழ் வேட்பாளரான விஜிந்தன் அவர்களை அறிமுகம் செய்து வைத்த நிகழ்வும் தமிழ்மக்களது ஆதரவை ஐக்கியதேசிய கட்ட்சியில் போட்டியிடும் விஜிந்தன் அவர்களுக்கு ஆதரவு வழங்கி பாராளுமன்றம் அனுப்ப வேண்டியது மக்களது கடமை எனவும் கேட்டுகொண்டார் .
தொடர்ந்து வவுனியா மாவட்ட தமிழ் கிராமங்களின் அபிவிருத்திக்கு வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கமும் அதனுடைய தலைவர் திரு.ம .ஆனந்தராஜ் அவர்களும் பொறுப்பாக இருப்பதாகவும் அவருடன் இணைந்து நூறுக்கணக்கான பட்டாதாரிகள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் களமிறக்கபட்டு தமிழ் கிராமங்களின் அபிவிருத்தி சார் செயல்பாடுகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் தெரிவித்தார் .
வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கம் வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகர் பகுதி கிராமங்கள் ,வெண்கல செட்டிகுளம் பிரதேச கிராமங்கள் மற்றும் வவுனியா வடக்கு நெடுங்கேணி என மூன்று பிரிவுகளிலும் தொழில் பட்டு வருவதாகவும் தொடர்ந்தும் அவர்களினூடாக எதிர்காலத்தில் தமிழ் கிராமங்களின் அபிவிருத்தி வேலைவாய்ப்புகள் என்பன கிராமங்களை சென்றடையவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் .
மேற்படி மக்கள் சந்திப்பின்போது அமைச்சரிடம் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பாக வேண்டுகோள்களை முன்வைத்ததோடு அதற்குரிய தீர்வினை விரைவில் பெற்று கொடுப்பதாகவும் தெரிவித்தார் . வன்னியின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக பல்வேறு வேலைத் திட்டங்கள் வேலைவாய்ப்புகள் தொடர்பாக புதிய முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார் .
நேற்றைய விஜயத்தின் போது அமைச்சருடன் வன்னி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் வேட்பாளர் விஜிந்தன் மற்றும் வவுனியாமாவட்ட பட்டதாரிகள் சங்க தலைவர் ஆனந்தராஜா உட்டபட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வவுனியா வன்னிமாவட்ட உறுப்பினர் கள் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலநூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.