தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வன்னி முதன்மை வேட்பாளர் 4 மணிநேரம் சி.ஐ.டியால் விசாரணை!!

512

s.kajan

தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் நான்கு மணிநேரம் கொழும்பில் இருந்து வந்த விசேட குற்றபுலனாய்வு பிரிவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இன்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் காலை 10.30 இல் இருந்து பிற்பகல் 2.30 வரை இவ் விசாரணை இடம்பெற்றுள்ளது.

தபால் மூல வாக்களிப்பின் போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு புள்ளடியிட்ட வாக்குச் சீட்டின் புகைப்படத்தினைப் பெற்று அதனை தனது சமூக வலைத்தளமான முகப்புத்தகதில் பதிவேற்றியமை தொடர்பிலேயே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



இதன்போது அப் புகைப்படம் எவ்வாறு பெறப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றதுடன் அவரது முகப்புத்தகத்தைப் பார்ப்பதற்கு பயன்படுத்தப்படும் கைத்தொலைபேசியும் சீல் வைக்கப்பட்டு பொலிசாரால் கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2 ஆம் திகதி மீண்டும் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.