சம்பியன்ஸ் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது இந்தியா..

837

சம்பியன்ஸ் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இன்றைய போட்டியில் இலங்கை இந்திய அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. அதற்கேற்ப முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர்கள் அபாரமாக துடுப்பெடுத்தாடி 50 ஓவர் நிறைவில் 3 விக்கட்டுகளை இழந்து 333 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். அதிகபட்சமாக தில்ஷான் 84 ஓட்டங்களையும் குஷால் பெரேரா 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.இந்திய அணி சார்பாக புவநேஷ் குமார், இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஒரு ஓவர் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பாக விராத் கோலி மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 3 சிக்ஸ்சர் அடங்கலாக 120 பந்துகளில் 144 ஓடங்களையும் தினேஷ் கார்த்திக் 81 பந்துகளில் 2 சிக்ஸ்சர் அடங்கலாக 106 ஓட்டங்களையும் பெற்று இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.இலங்கை அணி சார்பாக எரங்க 2 விக்கெட்களையும் திசார பெரேரா சேனாநாயக்க தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்

இன்றைய போட்டியில் இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுதாடினாலும் பந்துவீச்சு களத்தடுப்பு இரண்டிலும் தங்கள் திறமையை காட்ட தவறினர். இன்றைய போட்டியில் விட்ட தவறுகளை சரிசெய்து இனிவரும் போட்டிகளில் வெற்றி பெறுவார்களா என பொறுத்திருந்து பார்போம்.

~கேசா~