எங்களுக்கு சங்கக்காரதான் பிரட்மன் : அஞ்சலோ மத்யூஸ்!!

418

Sanga

பிரட்மன் விளை­யாடி பார்த்­த­தில்லை. சங்கக்கார­வைத்தான் பார்த்­தி­ருக்­கி­றேன் என்று இலங்கை அணித்­த­லைவர் அஞ்­சலோ மத்தியூஸ் சங்­காவை அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் ஜம்­பவான் பிரட்மனுடன் ஒப்­பிட்டு புகழ்ந்து பேசி­யுள்ளார்.

இலங்கை அணியின் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீரரும், முன்னாள் தலை­வ­ரு­மான சங்­கக்­கார தற்போது நடந்து கொண்­டி­ருக்கும் இந்­தி­யா­வுக்கு எதி­ரான டெஸ்ட் தொட­ரோடு சர்­வ­தேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற­வி­ருக்­கிறார்.

இந்­நி­லையில் சங்கா பற்றி மத்­தியூஸ் கூறு­கை யில்இ கடந்த 15 ஆண்­டு­க­ளாக இலங்கை அணிக்காக சிறந்த பங்­க­ளிப்பு அளித்த சங்­கா­வுக்கு நன்றி தெரி­வித்துக் கொள்­கிறோம்.
அவ­ரிடம் இருந்து நாங் கள் ஏரா­ள­மான நுணுக்­கங்களை கற்­றுள்ளோம். அவ­ரு­டைய கிரிக்கெட் அனு­ப­வங்கள் குறித்து எங்­க­ளுக்கு கற்­றுக்­கொ­டுக்க தயா­ராக இருக்­கிறார்.

நான் கிரிக்கெட் ஜாம்ப­வா­னான டொன் பிரட்மனை பார்த்­த­தில்லை. ஆனால் எளி­தான முறையில் சிறப்­பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சங்கக்காரவைத்தான் பார்த்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.