இந்தியா சென்ற இலங்கையர் ஆலய குளத்தில் இருந்து சடலமாக மீட்பு!!

495

1044514281body

இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன 78 வயதுடைய இலங்கை சுற்றுலா பயணி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.உத்திர பிரதேச சரவஸ்தி மாவட்ட கொரியன் ஆலய குளம் ஒன்றில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக உத்திர பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்குனா பகுதியில் உள்ள குளம் ஒன்றில் குதித்தே பாலித சுனில் கீர்த்திசிங்க என்ற இலங்கையர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.11ம் திகதி இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற 63 பேர் கொண்ட இலங்கையர்கள் குழுவில் பாலிதவும் ஒருவராவார்.

தங்குமிடத்தில் இருந்து வெளியில் சென்ற நபர் வீடு திரும்பாத காரணத்தால் பொலிஸார் தேடுதலை மேற்கொண்டு குளத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில் பாலிதவை சடலமாக மீட்டுள்ளனர்.