எப்போதும் போனுடனேயே இருப்பவரா நீங்கள்? ஆபத்து!!

336

iPhone-windows-phone

கட்டில் முதல் கழிவறை வரை உங்களுடனேயே பயணிக்கும் ஸ்மார்ட்போனின் ஒவ்வொரு சதுர அங்குலத்துக்கும் சுமார் இருபத்தைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தீங்கு விளைவுக்கும் பாக்டீரியா கிருமிகள் தொற்றிக் கொண்டுள்ளன என்றால் நம்புவீர்களா?

பொதுக் கழிவறைகள் மட்டுமே அதிகமான கிருமிகளுடன் இருப்பதாக எண்ணுகிறீர்களா? ஒரு பொதுக் கழிவறையின் ஒவ்வொரு சதுர அங்குலத்துக்கு சுமார் ஆயிரம் நோய் விளைவிக்கும் கிருமிகள் வரை இருக்கலாம். இதுவே, வீடுகளில் உள்ள தனிப்பட்ட கழிவறைகளில் சுமார், ஐம்பது முதல் முந்நூறு கிருமிகள் இருக்கக்கூடும்.

ஸ்மார்ட்போனுக்கு அடுத்த நிலையில், ஐபேட் போன்ற படிக்க பயன்படும் மின்னணு சாதனங்கள் சுமார் 600 பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளதாக சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கேம் கண்ட்ரோலர்கள் எனப்படும் விளையாட்டு சாதனங்களை கட்டுப்படுத்தும் உபகரணங்கள், பொதுக் கழிவறையைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளது.

கணினியின் தட்டச்சுப் பலகையில், பொதுக் கழிவறையைக் காட்டிலும் மூன்று மடங்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. இதில், ஒரு சதுர அங்குலத்துக்கு சுமார் மூன்றாயிரம் கிருமிகளும், மவுஸ்களில் சுமார் ஆயிரத்து அறுநூறு கிருமிகளும் இருப்பதாக வெவ்வேறு ஆய்வுகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.

மேற்கண்டவற்றை ஒப்பிட்டுப் பார்க்கையில், உண்மையில் ஓரளவு சுத்தமாக இருப்பது ரிமோட்கள் மட்டுமே! இவற்றில் ஒரு சதுர அங்குலத்துக்கு எழுபது கிருமிகள் இருப்பது ஓரளவு நிம்மதியான விஷயம்.

எல்லா இடங்களுக்கும் கைபேசியுடன் போவதாலும், சுத்தம் பற்றிய பெரிய அக்கறை இல்லாமல் இருப்பதாலேயும், பல்வேறு புதுப்புது வியாதிகள் நம்மைத் தாக்கி வரக் காரணமாகின்றன என மேற்கண்ட ஆய்வுகளின் முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.