உடல் பருமனுக்கான மரபணு கண்டுபிடிப்பு!!

447

2090267063Untitled-1உடல் பருமனுக்கான மரபணுவை, விஞ்ஞானிகள் கண்டறிந்து சாதனை படைத்துள்ளனர். உடல் பருமன் நோயால், உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உடல்பருமனுக்கான ஜீன் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை, விஞ்ஞானிகள், கொழுப்பை சேகரித்து உடல் பருமனை அதிகரிக்கும் ஜீனை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு ´14-3-3 ஜீட்டா´ என பெயரிடப்பட்டுள்ளது.

எலிகளின் மீது விஞ்ஞானிகள் நடத்திய சோதனையில், ´14-3-3 ஜீட்டா´ ஜீனை கட்டுப்படுத்துவதன் மூலம், 50 சதவீத வௌ்ளை கொழுப்பு அளவு குறைவதை கண்டறிந்தனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்த கொழுப்பு, உடல்பருமன், இதய நோய், நீரிழிவு போன்றவற்றுடன் தொடர்புடையது. இச்சோதனையை, அதிக உடல் எடை கொண்ட எலிகளின் மீது நடத்திய போது 22 சதவீத கொழுப்பு குறைந்துள்ளது.

இச்சோதனையின் மூலம், இந்த குறிப்பிட்ட ஜீனை முடக்குவதால் உடல் பருமனை கட்டுப்படுத்தலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.