ராட்சத கைகள் கொண்ட சிறுவனுக்கு அறுவை சிகிச்சை!!

335

HandsMainஜார்க்கண்ட் மாநிலத்திலொரு சிறிய கிராமத்தில் பிறந்தவன் சிறுவன் கலீம். பிறந்த நாள் முதல் சராசரியான மனிதர்களின் கைகளை விட பல மடங்கு அதிகம் கொண்ட கைகளுடன் பிறந்தான் சிறுவன் கலீம்.இந்த கைகளால் சிறுவன் தன் வாழ்நாளில் பல இன்னல்களை சந்தித்து வந்தான்.

மேலும், மூட நம்பிக்கையால் மூழ்கியிருந்த அந்த சிறுவனின் கிராமத்து மக்கள் அவனை சாத்தானின் வடிவமாகவும்,சபிக்கப்பட்ட சிறுவனாகவும் நினைத்து அவனை புறக்கணித்தனர்.கல்விப் புகட்ட வேண்டிய தலைமையாசிரியரும் அவனை பள்ளியில் சேர்க்க மறுத்து விட்டார்.சிறுவன் கலீம் 8 வயது நிரம்பியப் போது அவனுடைய ஒரு கைய் எடை 8 கிலோ ஆகும்.அவனின் உள்ளங்கை அடியிலிருந்து கை விரலின் முனை 13 அங்குல தூரத்தில் இருந்தது.

இதனால், சாப்பிடுவது முதல் தனது அன்றாட வேலைகளை செய்யக்குட சிறுவன் சிரமப்பட்டான். இதனை செய்வதற்கு அவனின் பெற்றோர்களின் உதவியை நாட வேண்டியிருந்தது.சிறுவனின் தந்தை நாள் வருமானத்துக்காக கூலித் தொழில் செய்து வருகிறார்.