பிந்துமாதவி, ஸ்ரீதிவ்யா, கயல் ஆனந்தி என பல நடிகைகள் தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்ததைத் தொடர்ந்து இப்போது மாதவி லதா என்ற இன்னொரு ஆந்திர நடிகையும் தமிழுக்கு வந்திருக்கிறார்.
இவர் ஏற்கனவே சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தார்.அதையடுத்து, இப்போது ஹரிகுமார் இரண்டு வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கும் மதுரை மணிக்குறவன் என்ற படத்தில் முக்கிய நாயகியாக நடித்து வருகிறார் மாதவி லதா.
ஏற்கனவே தெலுங்கில் நடித்த படங்களில் ஹோம்லி, கிளாமர் என இரண்டுவிதமாகவும் நடித்திருப்பதால் தமிழில் கதைகளுக்கேற்ப முழுசாக மாறி நடிப்பதாக கூறி சில டைரக்டர்களை சந்தித்து சான்ஸ் கேட்டு வருகிறார்.
மேலும், முன்னணி ஹீரோக்களின் படவாய்ப்புகள் கிடைப்பது தற்போதைக்கு நடக்காத காரியம் என்பதால், மூன்றாம்தட்டு ஹீரோக்களின் படங்களாகவே தேடி வருகிறார் மாதவி லதா.
மலையாள நடிகைகளைப் போன்று தெலுங்கு நடிகைகளுக்கும் கோலிவுட்டில் வரவேற்பு உண்டு என்பதால், மதுரை மணிக்குறவன் படம் திரைக்கு வருவதற்கு முன்பே ஓரிரு புதிய படங்களையாவது கைப்பற்றி விடவேண்டும் என்று அந்த படத்தில் நடிப்பதற்காக தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் படவேட்டையிலும் ஈடுபடுகிறார் மாதவி லதா.





