187 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கிறது இந்தியா : களத்தில் நிற்கிறார் சங்கக்கார!!

499

Pakistan-vs-Sri-Lanka-Abu-Dhabi2காலி சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­னத்தில் நடந்து வரும் இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான முதல் டெஸ்ட் போட்­டியில் இந்­திய அணி முதல் இன்­னிங்ஸில் 375 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது. இதில் தவான், கோஹ்­லியின் சதத்தால் இந்­திய அணி முதல் இன்னிங்ஸில் 192 ஓட்­டங்கள் முன்­னிலை பெற்­றுள்­ளது.

முதலில் விளை­யா­டிய இலங்கை அணிஇ அடுத்­த­டுத்து விக்­கெட்­டு­களை இழந்து 183 ஓட்­டங்­க­ளுக்கு ஆட்­ட­மி­ழந்­தது. சுழல் பந்­து­வீச்­சாளர் அஸ்வின், 6 விக்­கெட்­டு­களை வீழ்த்­தினார்.

இதைத் தொடர்ந்து முதல் இன்­னிங்ஸை ஆரம்­பித்த இந்­திய அணியின் தொடக்க வீரர் ராகுல் 7 ஓட்­டங்­க­ளு­டனும் ரோகித் சர்மா 9 ஓட்­டங்­க­ளு­டனும் வீழ்ந்­தனர். பின்னர் மற்­றொரு தொடக்க வீரர் தவானும் அணித் தலைவர் கோஹ்­லியும் இணைந்து அணியை நிமிர வைத்­தனர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்­திய அணி 2 விக்­கெட்­டு­களை இழந்து, 128 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்தது. நேற்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்­கி­யது. தவான்இ நேற்­றைய போட்­டியில் அபா­ர­மாக விளை­யாடி சதம் விளா­சினார். இது இவ­ருக்கு 4ஆவது சதமாகும். பின்னர் இந்­திய அணித் தலைவர் கோஹ்­லியும் சதம் பெற்றார். கோஹ்லி 103 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­த­போது ஆட்­ட­மி­ழந்தார்.

பின்னர் வந்த ரஹானே டக் அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து சஹா களம் கண்டார். மறு­மு­னையில் அபா­ர­மாக விளை­யாடி வந்த தவான் 134 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். அதன் பிறகு இந்­திய அணியின் விக்­கெட்­டுக்கள் அடுத்­த­டுத்து சரியத் தொடங்­கின.

இறு­தியில் இந்­திய அணி 375 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து. இதில் இலங்கை அணியின் பந்­து­வீச்­சாளர் தரிந்து கௌஷால் அபாரப் பந்­து­வீச்சை வெளிப்­ப­டுத்தி 5 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார்.

தனது 2ஆவது இன்­னிங் ஸை ஆரம்­பிக்க கள­மி­றங்­கிய இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்­பாட்ட வீரர்­க­ளான கரு­ணா­ரத்ன மற்றும் சில்வா ஆகிய இரு­வரும் ஓட்­ட­மேதும் பெறாத
நிலையில் வெளியே­றினர்.

அதன் பிறகு களம் கண்டார் சங்கா. அவ­ருக்கு ஜோடி­யாக மறு­மு­னையில் ஆடுகிறார் பிரசாத். நேற்­றைய ஆட்ட நேர முடி­வின்­போது இவ்விருவரும் களத்தில் நின்று 5 ஓட்டங்
களைப் பெற்றுக் கொண் டனர்.

இலங்கை அணியை விட 187 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. இன்று 3ஆவது நாள் ஆட்டம்.